இலங்கையின் கப்பற்றுறை அலுவல்களை நிருவகிக்கும் நிறுவனமான வணிகக் கப்பற்றுறைச் செயலகம் சமுத்திர அலுவல்களை மேற்பார்வை செய்வதிலான ஒட்டுமொத்தமான பொறுப்புக்களை வகிக்கின்றது. 1971 இன் 52 ஆம் இலக்கமுடைய வணிகக் கப்பல் அலுவல்கள் சட்டத்தினதும் அதன் பின்னர் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளினாலுமே இந்நிறுவனத்தின் அலுவல்கள் நிருவகிக்கப்பட்டு வருகின்றன. கடலில் சஞ்சரிக்கும் உயிர்களினதும் ஆதனங்களினதும் பாதுகாப்பு, சமுத்திரக் கல்வி, பயிற்றுவித்தல் பரீட்சைகளை நடத்தி சான்றிதழ்களை வழங்குதல், இலங்கைக் கொடியின் கீழ் காணப்படுகின்ற கப்பல்களின் பதிவு செய்தலை மேம்படுத்துதல், ஏற்புடைய ஏனைய சகலவிதமான தேசிய மற்றும் சர்வதேச உடன்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகளை அமுலாக்கல் தொடர்பிலான பொறுப்பினை அன் நிறுவனம் வகிக்கின்றது. இலங்கையில் தனது மாபெரும் கடமைப் பொறுப்பாக இந்நிறுவனம் அரசாங்கத்தின் சமுத்திரப் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை அமுலாக்கி வருகின்றது. இந்த வரையறைக்குள்ளேயும் கப்பல்கள் இலங்கை மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிக்கின்றதாவென பார்த்தலை உள்ளடக்கிய மாபெரும் கடமைப் பொறுப்புக்களை ஈடேற்றுதல் இந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.