• සිංහල
  • English (UK)
Increase size
Reset to Default
Decrease size
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
   
   
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
    • அறிமுகம்
    • தொழிற்பாடுகளும் சேவைகளும்
    • நிர்வாக அமைப்பு
  • விதிகளும் பிரமாணங்களும்
  • கப்பல்களைப் பதிவு செய்தல்
  • பரீட்சை
    • பரீட்சை நாள்காட்டி
    • பரீட்சை முடிவுகள்
  • கப்பல் பயிற்சி நிறுவனம்
  • வைத்தியர்கள்
  • கப்பல் சேவை வழங்குனர்கள்
  • சான்றிதழ்களின் திட்பநுட்பத் தன்மை
    • காவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)
    • இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)
  • தரவிறக்கங்கள்
    • MS அறிவித்தல்கள்
    • கடலோடிகளின் ஆவணங்கள்
    • கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி
    • உரிமங்களும் பொதுவானவையும்
  • ஆட்சேர்ப்புத் திட்டம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • கேள்விப்பத்திரம்
  • எம்மை தொடர்புகொள்ள
    • விசாரணைகள்
    • முக்கியஸ்தர்கள்
  • தள ஒழுங்கமைப்பு
  • Circulars
  • Record of Certificates
  • Bungalow
  • MSS Advertisement
  • Verification of Boat Master License
  • COC Recognize Issued by other Countries
  • VGM Applications
  • SRPS Documents
  • List of Approved SRPS Providers
  • Horse Power Certificate
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
    • அறிமுகம்
    • தொழிற்பாடுகளும் சேவைகளும்
    • நிர்வாக அமைப்பு
  • விதிகளும் பிரமாணங்களும்
  • கப்பல்களைப் பதிவு செய்தல்
  • பரீட்சை
    • பரீட்சை நாள்காட்டி
    • பரீட்சை முடிவுகள்
  • கப்பல் பயிற்சி நிறுவனம்
  • வைத்தியர்கள்
  • கப்பல் சேவை வழங்குனர்கள்
  • சான்றிதழ்களின் திட்பநுட்பத் தன்மை
    • காவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)
    • இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)
  • தரவிறக்கங்கள்
    • MS அறிவித்தல்கள்
    • கடலோடிகளின் ஆவணங்கள்
    • கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி
    • உரிமங்களும் பொதுவானவையும்
  • ஆட்சேர்ப்புத் திட்டம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • கேள்விப்பத்திரம்
  • எம்மை தொடர்புகொள்ள
    • விசாரணைகள்
    • முக்கியஸ்தர்கள்
  • தள ஒழுங்கமைப்பு
  • Circulars
  • Record of Certificates
  • Bungalow
  • MSS Advertisement
  • Verification of Boat Master License
  • COC Recognize Issued by other Countries
  • VGM Applications
  • SRPS Documents
  • List of Approved SRPS Providers
  • Horse Power Certificate

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இடையறாத விலக்கற் சான்றிதழைப் பெற என்னிடம் இருக்கவேண்டிய தகைமைகள் யாவை?
  • வயது 18 வருடங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். (இது பயிலிளவல்களுக்கு ஏற்புடையதன்று)
  • கப்பற்றளம் / இயந்திரம் / உணவு வழங்கல் பற்றிய தொழிற்றகைமைகள் இலுத்தல் வேண்டும்.
  • உரிய ஆரம்ப பயிற்சி பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ உத்தியோகத்தரால் தேகாரோக்கியம் மிக்கவர் என வெளிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
இடையறாத விலக்கல் சான்றிதழைப் பெற அவசியமான ஆவணங்கள் யாவை?
  1. விண்ணப்பப் பத்திரம்
  2. பிறப்புச் சான்றிதழ்
  3. தேசிய அடையாள அட்டை
  4. செல்லுபடியாகும் கடவுச் சீட்டடு
  5. பொலிஸ் அறிக்கை
  6. வணிக கப்பற்றுறை பிரிவினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ உத்தியோகத்தரொருவர் விநியோகித்த செல்லுபடியாகும் மருத்துவச் சான்றிதழ்.
  7. உரிய செல்லுபடியான குறுங்கால பாடநெறிச் சான்றிதழ்கள்.
    • அடிப்படை முதலுதவிகள்
    • பிரத்தியேக உயிர்காத்தல் நுணுக்கமுறைகள்
    • தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு
    • தனிப்பட்ட பாதுகாப்பும் சமூக பொறுப்பும்
    • கடல்சார் ஆங்கில மொழிப் பயிற்சி நெறி
  8. தொழில்சார் தகைமைகள்
  9. க. பொ. த. (சா/த.) அல்லது க. பொ. த. (உ/த.) - பயிலிளவல் உத்தியோகத்தர்களுக்காக.
  10. தேசிய கண் வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட கண் பார்வை பற்றிய சான்றிதழ் - அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும்
  11. வர்ணப் பார்வை / அரிக்கன் விளக்கு பரிசோதனை
  12. கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டு
CDC இடையறா விலக்கற் சான்றிதழ் எவ்வளவு காலத்திற்குச் செல்லுபடியாகும்?

முதற்றடவை விநியோகம் 5 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.

இடையறா விலக்கற் சான்றிதழுக்கான விண்ணப்பப் பத்திரத்தைப் பெறுவதெப்படி?
விண்ணப்பப் பத்திரத்தை வணிகக் கப்பல் பிரிவிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இன்றேல் வணிகக் கப்பல் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் our website

இடையறாத விலக்கற் சான்றிதழுக்கான (CDC) கட்டணம் யாது?

ரூ. 1500/- ஆகும்.

இடையறா விலக்கற் சான்றிதழை (CDC) மீளச் செல்படியாக்க சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
  1. விண்ணப்பப் பத்திரம்
  2. இடையறா விலக்கற் சான்றிதழ் (CDC)
  3. வணிகக் கப்பற் பிரிவு அங்கீகரித்துள்ள வைத்திய உத்தியோகரொருவரால் விநியோகிக்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
  4. உரிய செல்லுபடியான குறுங்கால பாடநெறிச் சான்றிதழ்கள்.
    1. அடிப்படை முதலுதவிகள்
    2. தனிப்பட்ட உயிர்காப்பு நுணுக்கமுறைகள்
    3. தீ தடுப்பும் தீயணைப்பும்
    4. தனிப்பட்ட பாதுகாப்பும் சமூக பொறுப்பும்
  5. கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டு
  6. உத்தியோகத்தர்களிடம் இடையறா விலக்கற் சான்றிதழ் இருத்தல் வேண்டும்

வணிகக் கப்பல் பிரிவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வைத்திய உத்தியோகத்தர்கள் யாவரென்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
வணிகக் கப்பல் பிரிவிடம் விசாரித்தறியலாம் அல்லது வணிகக் கப்பல் இணையத்தளத்தில் பார்க்கலாம் our website.

இடையறா விலக்கற் சான்றிதழை (CDC) மீளச் செல்லுபடியாக்க அறவிடும் கட்டணம் யாது?

ரூபா 1,000.00 ஆகும்.

பதிவு செய்தலுக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
  1. விண்ணப்பப் பத்திரம்
  2. இடையறா விலக்கற் சான்றிதழ் (CDC)
  3. செல்லுபடியாகும் குறுங்கால பாடநெறிச் சான்றிதழ்கள்
    1. அடிப்படை முதலுதவிகள்
    2. தனிப்பட்ட உயிர்காப்பு நுணுக்க முறைகள்.
    3. தீ தடுப்பும் தீயணைப்பும்.
    4. தனிப்பட்ட பாதுகாப்பும் சமூக பொறுப்பும்.
  4. இடையறா விலக்கற் சான்றிதழைக் கொண்டுள்ள உத்தியோகத்தர்கள்.
  5. கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டு.
  6. அவசியமேற்படின் முகவரிடமிருந்து விலக்கற் கடிதம்.
கடலோடிகளைப் பதிவுசெய்வதற்கான கட்டணங்கள் யாவை?
மாஸ்டர் பிரதான பொறியியல் உத்தியோகத்தர் - ரூ.600.00
பிரதான உதவியாளர் / இரண்டாவது பொறியியல் உத்தியோகத்தர் - ரூ.400.00
மின் பொறியியலாளர் - ரூ.200.00
பிற உத்தியோகத்தர்கள் - ரூ.200.00
மின்னியல் வல்லநர் - ரூ.100.00
பயிலிளவல் உத்தியோகத்தர் - ரூ.100.00
பிற வகைப்படுத்தல் - ரூ.100.00
கப்பற்றள / இயந்திர தகுதிச் சான்றிதழ் (COC) விநியோகிக்கத் தேவையானவை யாவை?

அபேட்சகருக்கு பொருத்தமான பயிற்சியும் கடல்சார் சேவை அனுபவமும் இருக்க வேண்டுமென வணிககப்பல் பிரிவு விதித்துள்ளது. அதைப் போன்றே COC சான்றிதழ் விநியோகிக்கப்பட முன்னர் பரீட்சார்த்தி வைத்திய மற்றும் கண்பார்வை பரிசோதனையிலும் எழுத்து மூலமான பரீட்சையிலும் உரிய வகையில் சித்தியெய்துதல் வேண்டும். பயிற்றப்பட்ட கடல் சேவை அனுபவம் மற்றும் தைதிய தேவைப்பாடுகள் தொடர்பான விபரங்களை வணிக கப்பல் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். our website.

COC சான்றிதழ் விநியோகிக்கப்பட நான் பொருத்தமானவனா என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?
ஒவ்வொரு தரத்தையும் சேர்ந்த CDC சான்றிதழை விநியோகிக்கும் பொருட்டு இருக்க வேண்டிய தகைமைகள் பற்றிய வழிகாட்டிகள் வணிகக் கப்பல் பிரிவின் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். (வர்த்தமானி இலக்கம் 1036/21 - 1998) தெளிவுபடுத்தல்கள் ஏதும் தேவையாயின் வணிகக் கப்பல் பிரிவின் பரீட்சைகள் பிரிவிடம் விசாரிக்கவும்.

தகைமை இருக்கின்றதென்பதற்கான கடிதமொன்றை விநியோகிக்க வணிக்கக் கப்பல் பிரிவுக்கு எவ்வளவு காலம் செல்லும்?

விண்ணப்பப் பத்திரத்துடன் ஏனைய சகலவிதமான ஆவணங்களையும் வணிகக் கப்பல் பிரிவுக்கு சமர்ப்பித்த பின்னர் பொதுவாக ஒரு வாரம் செல்லும். +94 112435127 (23) இலக்கத்திற்கு அழைத்து வணிகக் கப்பல் பிரிவின் பரீட்சைப் பிரிவிடமிருந்து உங்களின் விண்ணப்பப் பத்திரம் பற்றிய நிலைமையை கேட்டறியலாம்.

COC சான்றிதழை மீளச் செல்லும்படியாக்க அவசியமான ஆவணங்கள் யாவை?

கீழே குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் உங்களின் விண்ணப்பப் பத்திரத்தை வணிகக் கப்பல் பிரிவுக்கு சமர்ப்பிப்பதன் மூலமாக உங்களின் CDC சான்றிதழை மீளச் செல்லுபடியாக்கிக் கொள்ளலாம்.

CDC சான்றிதழிலில் பிரதி (மீளச் செல்லுபடியாக்கும் திககிக்கு நேர்முந்திய ஐந்து வருட காலப்பகுதிக்குள் 1 வருட கடல்சார் சேவை நிலவ வேண்டும்.)

கடவுச் சீட்டின் பிரதி.

வணிகக் கப்பல் பிரிவினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ உத்தியோகத்தரொருவரால் விநியோகிக்கப்பட்ட செல்லுபடியான மருத்துவச் சான்றிதழ் பிரதி.

வணிகக் கப்பல் பிரிவினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழில் பிரதி.

மீளச் செல்லுபடியாக்கும் பாடநெறிச் சான்றிதழ் பிரதி

GMDSS சான்றிதழின் பிரதி (கப்பற்றள திணைக்களத்திற்கு மாத்திரம் ஏற்புடையதாகும்.)

இலங்கையர் அல்லாத ஒருவரின் சான்றிதழை ஏற்றுக்கொள்ளுமாறு எவ்வாறு வநியோகிப்பது?
இலங்கையர் அல்லாத ஒருவரின் சான்றிதழை ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பிக்கும் வேலையில் இலங்கையரல்லாத சான்றிதழை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துகின்ற புறக்குறிப்பு அல்லது அத்தகைய ஒன்றைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் பத்திரத்தை இலங்கையின் கரையோர நிருவாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் பத்திரம் கீழ்க்காணும் ஆவணங்களுடன் / தகவல்களுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் :

  1. அண்மையில் எடுத்த இரண்டு நிழற்படங்கள் (1' - 1¼)
  2. சம்பந்தப்பட்ட நாட்டின் தகுதிச் சான்றிதழின் சான்றுபடுத்திய பிரதி.
  3. சம்பந்தப்பட்ட நாடு விநியோகித்த மருத்துவ தகுதிச் சான்றிதழின் நிழற் பிரதி
  4. சம்பந்தப்பட்ட நாட்டினால் விநியோகிக்கப்பட்ட ஊனுஊ சான்றிதழ்
  5. கட்டணம் (ரூ.1,000.00)
கப்பலை தற்காலிகமாக / நிரந்தரமாகப் பதிவு செய்ய அசிவயமான ஆவணங்கள் யாவை?
  1. விற்பனைச் சீட்டு
  2. கொள்வனவு மற்றும் விற்பனைக் கம்பெனிகளின் பணிப்பாளர் சபை பிரேரணைகள் (இருப்பின்)
  3. வகுப்பினை உறுதிப்படுத்தல்
  4. நிகழ்கால நியதிச்சட்ட சான்றிதழ்கள் (பிரதிகள்)
  5. பதிவு செய்யப்படுகின்ற வேளையில் ஏதேனும் கலம் கீழே குறிப்பிடப்பட்ட (IACS அங்கத்துவ சங்கங்கள்) வகைப்படுத்தல் சங்கமொன்றினால் வகை படுத்தப்பட்டிராவிடின் அத்தகைய கலமொன்றைப் பதிவு செய்ய இயலாது.)
  • American Bureau of Shipping
  • Bureau Veritas
  • China Classification Society
  • Det Norske Veritas
  • Germanischer Lloyd
  • Korean Register of Shipping
  • Lloyds Register
  • Nippon Kaiji Kyokai
  • Registro Italiano Navale
  • Russian Maritime Register of Shipping
  • Indian Register of Shipping

அல்லது இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறுவகைப்படுத்தல் கம்பெனியொன்றினால் வகைப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

மேலதிக விபரங்கள் எமது இணையத்தளம் மூலமாகவோ இலங்கைக் கப்பல்களைப் பதிவு செய்யும் பதிவாளரிடம் 10 +94 112 388 376 மூலம் தொடர்பு கொண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

கப்பல்களைப் பதிவு செய்வதற்கான நடைமுறை யாது?
தற்காலிக பதிவு செய்தலுக்கு தேவையான ஆவணங்கள்

  1. உரிமையை உறுதிப்படுத்துகின்ற நொத்தாரிசு பதிவேடு (விற்பனைத்துண்டு அல்லது கட்டுமாணம் செய்தவரின் சான்றிதழ்)
  2. விண்ணப்பதாரியிடம் வெளிநாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலமொன்றே காணப்படுமாயின் சொத்துவத்தை மாற்றாமல் கலத்தை இலங்கைக் கொடியின் கீழ் மாற்றியமைக்கான தகுதிவாய்ந்த அதிகாரியினால் முறையாக சட்டமுறையானதாக்கியமைக்கான சொத்துவச் சான்று.
  3. செல்லுபடியற்றதாக்கும் சான்றிதழ் அல்லது நிகழ்காலப் பதிவின் இணக்கப்பாடு.
  4. கொள்வனவு மற்றும் விற்பனைக் கம்பெனிகளின் பணிப்பாளர் சபைப் பிரேரணைகள்.
  5. மேலே காட்டப்பட்ட வகைப்படுத்தல் சங்கமொன்றினால் விநியோகிக்கப்பட்ட வகுப்புச் சான்றிதழ் அல்லது கடற்பயணத்திற்குப் பொருத்தமானதென்பற்கான சான்றிதழ்.

மேலதிக விபரங்கள் எமது இணையத்தளம் மூலமாகவோ இலங்கைக் கப்பல்களைப் பதிவு செய்யும் பதிவாளரிடம் + 94 112 388 376 மூலம் தொடர்பு கொண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கைக் கப்பலொன்றை சொந்தமாக வைத்திருப்பதற்கான தகைமைகள் யாவை?
எமது இணையத்தளத்தில் உள்ள “Hand book for ship owners” எனும் நூலில் தகைமைகள் பற்றிய விபரங்கள் உள்ளன.

கப்பல் பதிவு தொடர்பான கட்டணங்கள் யாவை?

எமது இணையத்தளத்தில் உள்ள கட்டண ஒழுங்குவிதிகளில் (1471/11 - 2006 ஆம் இலக்க வர்த்தமானியில்) கட்டணங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. Fees Regulations

gic ta

இற்றைப்படுத்தியது : 2023-09-04.
எழுத்துரிமை © 2023 வணிகக் கப்பற்றுறைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது